பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பல் நியூயார்க் சென்றடைந்தது

प्रविष्टि तिथि: 05 JUL 2026 7:18PM by PIB Chennai

இந்திய கடற்படை பாய்மரப் பயிற்சி கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி , அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச கடற்படை அணிவகுப்பு மற்றும் பாய்மரப் பயணக் கொண்டாட்டங்களில் பங்கேற்க, 2026 ஜூலை 4 அன்று நியூயார்க் துறைமுகத்தை சென்றடைந்தது. ஹட்சன் நதிக்கரையில் நடைபெற்ற கண்கவர் பாய்மர அணிவகுப்பின் போது, இந்தக் கப்பல், இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தையும், பல நூற்றாண்டுகள் பழமையான கடற்பயண மரபுகளையும் கொண்டாடும் விதமாக, இந்திய மூவர்ணக் கொடியை பெருமையுடன் பறக்கவிட்டது.

இந்தப் பயணம், கப்பலின் 10 மாத கடல்கடந்த பயணமான 'லோகாயன் 2026'-ன் ஒரு பகுதியாகும். இது கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், சர்வதேச நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்புவதற்கும், நட்பு நாடுகளுடனான கடற்படை ஈடுபாட்டை ஆழப்படுத்துவதற்கும் இந்தியக் கடற்படையின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

அட்லாண்டிக் பெருங்கடலின் பரந்த நீர்ப்பரப்பிலிருந்து நியூயார்க்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுகம் வரை, ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பல் இந்தியாவின் கடலியல் மரபுகளை முன்னெடுத்துச் செல்வதோடு, பெருங்கடல்கள் முழுவதும் நட்பையும் ஒத்துழைப்பையும் ஊக்குவித்து, கடல்சார் உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281357&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2281414) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी