வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஜம்மு & காஷ்மீரிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 'அரேகோ' செர்ரி மற்றும் 'சென்ட்ரோஸ்' பிளம்ஸ் பழங்களின் முதல் ஏற்றுமதி
प्रविष्टि तिथि:
04 JUL 2026 8:16PM by PIB Chennai
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாய் நகரங்களுக்கு உயர்தர 'அரேகோ செர்ரி' (அடர்த்தியான முறையில் பயிரிடப்பட்ட ஐரோப்பிய இனிப்பு செர்ரி) மற்றும் 'சென்ட்ரோஸ் பிளம்' பழங்களின் முதல் ஏற்றுமதியை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தது.
இந்தப் பகுதியிலிருந்து உயர்தர தோட்டக்கலை விளைபொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் அனைத்துத் தரப்பினரின் கூட்டு முயற்சிகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா, அபேடா தலைவர் திரு அபிஷேக் தேவ் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் அபேடா அதிகாரிகள், ஜம்மு-காஷ்மீர் அரசின் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், ஏற்றுமதியாளர்கள், சர்வதேச வாங்குநர்கள் மற்றும் தோட்டக்கலைத் துறையைச் சார்ந்த பிற பங்குதாரர்கள் கலந்துகொண்டனர்.
இந்த மைல்கல்லை முன்னிட்டு விவசாயிகளுக்கும் ஏற்றுமதியாளருக்கும் வாழ்த்து தெரிவித்த அபேடா தலைவர் திரு அபிஷேக் தேவ், "மிகப்பெரிய ஏற்றுமதித் திறனுடன் கூடிய உயர்தர தோட்டக்கலைப் பொருட்களுக்கான ஒரு முக்கிய மையமாக ஜம்மு காஷ்மீர் உருவெடுத்துள்ளது. ஏற்றுமதி ஊக்குவிப்பு முயற்சிகள், தர மேம்பாடு மற்றும் உலகளாவிய நுகர்வோரை அணுகுதல் ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்கு சந்தை அணுகலை எளிதாக்குவதில் அபேடா உறுதியாக உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரேகோ செர்ரி மற்றும் சென்ட்ரோஸ் பிளம்ஸ் ஏற்றுமதி செய்யப்படுவது, இந்தியாவின் உயர்தரப் பழங்களுக்கான வளர்ந்து வரும் சர்வதேசத் தேவையைப் பிரதிபலிக்கிறது. இது விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், சிறந்த விலை கிடைப்பதன் மூலம் அதிக வருமானத்திற்கும் வழிவகுக்கும் " என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281136®=3&lang=1
***
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2281221)
आगंतुक पटल : 9