பாதுகாப்பு அமைச்சகம்
மார்ஷல் அர்ஜன் சிங் நினைவு ஹாக்கிப் போட்டியின் 7-வது பதிப்பை விமானப்படை நடத்தியது
प्रविष्टि तिथि:
03 JUL 2026 4:33PM by PIB Chennai
மார்ஷல் அர்ஜன் சிங் நினைவு ஹாக்கிப் போட்டியின் 7-வது பதிப்பு, ஜலஹள்ளி விமானப்படைத் தளத்தில் உள்ள அமித் சிங் பக்ஷி ஹாக்கி மைதானத்தில், 2026, ஜூன் 23 முதல் ஜூலை 03 வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன.
நிறைவு விழா 03 ஜூலை 2026 அன்று காலை 07:30 மணிக்கு நடைபெற்றது. பயிற்சிப் பிரிவின் தலைமைத் தளபதியான ஏர் மார்ஷல் சீத்தபள்ளி ஸ்ரீனிவாஸ் தலைமை விருந்தினராக விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்திய ஹாக்கி வீராங்கனை செல்வி பல்ஜீத் கவுர், ஒலிம்பிக் வீரரான திரு ஸ்ரீஜேஷ் பி.ஆர் ஆகியோர் நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இத்தொடரின் இறுதிப் போட்டி இந்திய விமானப்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையே நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய விமானப்படை ஹாக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
வெற்றியாளர், இரண்டாம் இடம் பிடித்த அணிகளுக்கு முறையே ₹10,00,000/-, ₹8,00,000/- ரொக்கப் பரிசுகளுடன் பதக்கங்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
****
(Release ID: 2280746)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2281147)
आगंतुक पटल : 14