பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் சனந்தில் செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்

செமிகான் இந்தியா திட்டம் அதிவேகமாக முன்னேறி வருகிறது : பிரதமர்

प्रविष्टि तिथि: 04 JUL 2026 7:22PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.07.2026) குஜராத்தின் சனந்தில், சிஜி செமி அவுட்சோர்ஸ்டு செமிகண்டக்டர் அசெம்பிளி அண்ட் டெஸ்ட் (OSAT) என்ற செமிகண்டக்டர் ஆலையைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், தனது இலக்குகளை அடைவதில் தேசத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இந்தத் தொடக்க விழா ஒரு சான்றாக விளங்குகிறது என்று குறிப்பிட்டார். நாடு தனது வலுவான தீர்மானங்களை எவ்விதத் தயக்கமுமின்றி உறுதியான செயல்களாகத் தொடர்ந்து மாற்றி வருகிறது என்று அவர் கூறினார்.

 நாட்டை மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மையமாக மாற்றுவநு அரசின் முக்கிய நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு சிப் வடிவமைப்பு, உள்ளூர்மயமாக்கப்பட்ட உற்பத்தி ஆகிய பரந்த உத்திகளால் உந்தப்பட்டு, இந்த மூன்றாவது பெரிய ஆலையில் வணிக ரீதியான சிப் பேக்கேஜிங் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். இந்தியாவில் வடிவமைப்பு, இந்தியாவில் தயாரிப்பு என்ற அடிப்படைக் கொள்கையுடன் நாடு வெற்றிகரமாக முன்னேறியுள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். செமிகான் இந்தியா திட்டம் அதிவேகமாக முன்னேறி வருகிறது என அவர் கூறினார்.

புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட இந்த ஆலையை சர்வதேச ஒத்துழைப்பின் கலங்கரை விளக்கமாக எடுத்துரைத்த பிரதமர், உள்நாட்டு, ஜப்பானிய, தாய்லாந்து தொழில் கூட்டாளர்களை இணைக்கும் கூட்டு முயற்சிகளைப் பாராட்டினார். இந்த முயற்சி சிறப்பானது என்று விவரித்த அவர்,  இது தொழில்நுட்ப நம்பிக்கை, எல்லை தாண்டிய ஒத்துழைப்பு ஆகியவற்றின் வலுவான மாதிரி என்பதை எடுத்துரைத்தார். இது இந்தியாவின் செமிகண்டக்டர் பயணத்திற்கு முற்றிலும் புதிய உத்வேகத்தை அளிக்கப் போகிறது என்று அவர் கூறினார்.

உண்மையான உற்பத்தித் திறன் என்பது தனித்த தொழிற்சாலைகளில் இருந்து உருவாவதில்லை என்பதை வலியுறுத்துவதற்காக, உலகளாவிய தொழில் வரலாற்றிலிருந்து முக்கிய அம்சங்களைப் பிரதமர் எடுத்துரைத்தார். சிலிக்கான் வேலி, சின்சு அறிவியல் பூங்கா, சுகுபா அறிவியல் நகரம் போன்ற புகழ்பெற்ற தொழில்நுட்ப மையங்களை மேற்கோள் காட்டிய அவர், விரிவான, ஒருங்கிணைந்த சூழல் அமைப்புகளை உருவாக்குவதன் முழுமையான அவசியத்தை  எடுத்துரைத்தார்.

ஒரு வலுவான உள்நாட்டுச் சூழலமைப்பு வேகமாக உருவாகி வருவதை விவரித்த பிரதமர், மைக்ரான், கெய்ன்ஸ், சிஜி செமி போன்ற முக்கிய நிறுவனங்கள் இப்பகுதியில் வெறும் சில மாதங்களுக்குள் ஒரே நேரத்தில் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். கடந்த பத்து ஆண்டுகளில் வகுக்கப்பட்ட நீண்டகால தொழில்நுட்பக் கொள்கைகளிலிருந்து உருவாகும், ஒரு முன்னேற்றமே தற்போதைய விரிவாக்கம் என்று அவர் விளக்கினார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மின்னணுப் புரட்சியின் இயல்பான அடுத்த கட்டம் இதுவாகும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத் தாக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில், புதிய ஆலையில் பணியாற்றி வரும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த இளம் பெண்களின் எழுச்சியூட்டும் கதைகளைப் பிரதமர் பகிர்ந்துகொண்டார்.

 பல உற்பத்தி ஆலைகள் குறித்த நேரத்தில் செயல்படுத்தப்பட்டதை அவர் பாராட்டினார்.  140 கோடி இந்தியர்கள் நிச்சயமாக 2047-ம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றுவார்கள் என்று குறி பிரதமர் நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281125&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2281138) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Odia