அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கல்லீரல் மற்றும் நீரிழிவு நோய்கள் குறித்து தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
04 JUL 2026 4:08PM by PIB Chennai
இந்தியாவில் கல்லீரல் மற்றும் நீரிழிவு நோய்கள் அதிகரிப்பது பெரிய வளர்சிதை மாற்றத்தின் ஒரு பகுதியாகும் என மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். புது தில்லியில் உள்ள கல்லீரல், பித்தப்பை அறிவியல் நிறுவனத்தில் நடைபெற்ற கல்லீரல், வளர்சிதை மாற்ற நோய்கள் தொடர்பான நிகழ்ச்சியில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.
கொழுப்பு கல்லீரல், உயர் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்புக் கோளாறு போன்ற கோளாறுகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாகப் பிணைந்து, பாதிப்பை உண்டாக்குகின்றன என்றார். முன்பை விட தற்போது இந்த நோய்கள் மிக இளம் வயதிலேயே தோன்றுவதால், இது ஒரு மருத்துவப் பிரச்சினை என்பதைத் தாண்டிய ஒரு சவாலாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். இதில் பரந்த பொது விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு செயல்திட்ட நடவடிக்கை தேவை என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், நிதி ஆயோக்கின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் வினோத் பால் உட்பட, நாடு முழுவதிலுமிருந்து முன்னணி மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் இவர்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281062®=3&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2281134)
आगंतुक पटल : 10