திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நொய்டாவில் உள்ள மகளிருக்கான தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

प्रविष्टि तिथि: 04 JUL 2026 2:06PM by PIB Chennai

மத்திய அரசின் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நொய்டாவில் இயங்கும், பெண்களுக்கான தேசிய திறன் பயிற்சி நிறுவனம் (NSTI(W)), 2026–27-ம் கல்வியாண்டிற்கான கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ், என்சிவிஇடி (NCVET) அங்கீகாரம் பெற்ற திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், நிறுவனத்தின் சேர்க்கை இணையதளமான https://nstiwnoida.dgtmsde.in மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பங்களை, 12 ஜூலை, 2026 அன்று மாலை 06:00 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

தரமான தொழிற்கல்வி மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில்அளிக்கும் ஒரு முதன்மை நிறுவனமாக, நொய்டாவில் உள்ள என்எஸ்டிஐ(பெண்கள்) திகழ்கிறது. இங்கு செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் தொழில்நுட்பம், குறைக்கடத்தி தொழில்நுட்பம், 5ஜி கட்டமைப்புகள், ஆடை வடிவமைப்பு, கணினிப் பயன்பாடுகள், கணினி வழி எம்பிராய்டரி வடிவமைப்பு, அழகுக்கலை, உள்ளிட்ட பலதரப்பட்ட துறைகளில் தொழில் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281011&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2281087) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी