சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சிஎஸ்ஐஆர் - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம், இந்தியத் தரக் கவுன்சில் இணைந்து தர விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது

प्रविष्टि तिथि: 03 JUL 2026 6:36PM by PIB Chennai

சிஎஸ்ஐஆர் - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம், பரிசோதனை ஆய்வகங்களுக்கான ஐஎஸ்ஓ/ஐஇசி  17025:2017 தரநிலை அடிப்படையிலான தேசிய பரிசோதனை, அளவுத் திருத்த ஆய்வகங்களுக்கான அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை 03 ஜூலை 2026 அன்று நடத்தியது.

நாடு முழுவதும் தர விழிப்புணர்வை ஊக்குவிப்பதையும், தர அமைப்புகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்தியத் தரக் கவுன்சிலின் 'குன்வத்தா யாத்ரா' என்ற முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் என். ஆனந்தவல்லி, நிர்வாக ஆலோசகர் டாக்டர் எஸ். பாரிவள்ளல் ஆகியோர் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய டாக்டர் என். ஆனந்தவல்லி, பரிசோதனை ஆய்வகங்களின் தொழில்நுட்பத் திறன், நம்பகத்தன்மையை உறுதி செய்வதில், தேசிய பரிசோதனை, அளவுத் திருத்த ஆய்வகங்களுக்கான வாரியம் வழங்கும் அங்கீகாரத்தின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். அங்கீகாரம் என்பது பரிசோதனை முடிவுகள் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதுடன், ஆய்வகங்கள், தேசிய, சர்வதேச தரநிலைகளைப் பூர்த்தி செய்யவும், அதன் மூலம் ஆராய்ச்சி, தொழில், உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டிற்கு உதவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப அமர்வை தேசிய பரிசோதனை, அளவுத் திருத்த ஆய்வகங்களுக்கான அங்கீகார வாரியத்தின் உதவி இயக்குநர் திரு. சிரிபாபு நடத்தினார். அவர்  ஐஎஸ்ஓ/ஐஇசி 17025:2017-ன் தேவைகள், அந்த வாரியத்தின் அங்கீகார நடைமுறை, சிறந்த ஆய்வக செயல்முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், தேசிய பரிசோதனை, அளவுத் திருத்த ஆய்வகங்களுக்கான அங்கீகார வாரிய அங்கீகாரத்தைப் பெறுவதற்கும், பராமரிப்பதற்கும் நடைமுறை வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கும் வகையிலும் இந்த கலந்துரையாடல் அமர்வு அமைந்திருந்தது.

இந்தியத் தரக் கவுன்சில், அதன் பல்வேறு வாரியங்களின் செயல்பாடுகள் குறித்து தேசிய தர ஊக்குவிப்பு வாரியத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி நேத்ரா ஜி விளக்கினார். ஆய்வக வல்லுநர்கள் அங்கீகாரத்தின் பயன்கள் குறித்து புரிந்துகொள்வதற்கு, இந்நிகழ்ச்சி மதிப்புமிக்க தளத்தை வழங்கியதுடன், பரிசோதனை ஆய்வகங்களில் தரம், சிறந்து நடைமுறைகளை ஊக்குவிப்பதில் சிஎஸ்ஐஆர் - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்நிகழ்ச்சியை உத்திசார் மனிதவள மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் டாக்டர் எஸ். மகேஸ்வரன் ஒருங்கிணைத்தார்.

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2280892) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English