பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பல்வேறு தனிநபர், நிறுவனங்களின் திறன்களை ஒருங்கிணைக்கும் வகையில் அரசின் முழுமையான அணுகுமுறை செயல்படுகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
03 JUL 2026 4:44PM by PIB Chennai
மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் 'அரசின் முழுமையான அணுகுமுறை' என்பது, பல்வேறு தனிநபர், நிறுவனங்களின் திறன்களை ஒருங்கிணைப்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்தார். இந்த அணுகுமுறையில், நிறுவனங்களும், துறை சார்ந்த நிபுணர்களும், பொதுவான தேசிய இலக்குகளை அடைவதற்காகத் தங்களது தனிப்பட்ட வலிமை, நிபுணத்துவத்தை பங்களிப்பதாக அவர் தெரிவித்தார்.
திறன் மேம்பாடு என்பது இனி தனிநபர்களின் திறன்களை அதிகரிப்பதுடன், 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான லட்சியத்தை எட்டுவதற்கான நிர்வாக அமைப்புகளைத் தயார்படுத்தும் வகையில், நிறுவனங்களுக்கிடையே ஒருங்கிணைந்த கூட்டுச் செயல்பாட்டை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
புதுதில்லியில் உள்ள ஸ்கோப் மாநாட்டு மையத்தில், திறன் மேம்பாட்டு ஆணையம், பொதுத்துறை நிறுவனங்களின் மாநாடு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த லட்சியம், அறிவு, வாரிசுரிமை, நல்லிணக்கத்தை வளர்த்தல் என்ற ஓராண்டு கால தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் மூன்றாம் தொகுப்பை டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். கட்டமைக்கப்பட்ட தலைமைத்துவ மேம்பாடு, திறன் மேம்பாடு மூலம், எதிர்கால வாரிய அளவிலான பொறுப்புகளுக்கு மூத்த நிர்வாகிகளைத் தயார்படுத்தும் வகையில், இந்திய வர்த்தக மேலாண்மை உயர்கல்வி நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280759®=3&lang=1
(Release ID:2280759)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2280886)
आगंतुक पटल : 7