சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மவுண்ட் அபுவில் சீர்திருத்தம் & சிந்தனை அரங்கம் நிகழ்ச்சிக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஏற்பாடு

प्रविष्टि तिथि: 03 JUL 2026 5:39PM by PIB Chennai

மத்திய சட்டம், நீதி அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்ட விவகாரங்கள் துறை, சட்டமியற்றும் துறை ஆகியவை இணைந்து, ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் உள்ள பிரம்ம குமாரிகள் தலைமையகமான 'ஞான சரோவரில்', 2026 ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் 'சீர்திருத்தம் & சிந்தனை அரங்கம் 2026' நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளன.

அமைச்சகத்தின் முக்கிய சாதனைகளை மதிப்பாய்வு செய்யவும், முக்கியத்துவம் வாய்ந்த சட்டம், நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை முன்னிலைப்படுத்தவும், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் நவீன, திறமையான, மக்களை மையமாகக் கொண்ட சட்ட அமைப்பை உருவாக்குவதற்கான எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கவும், இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய சட்டம், நீதித் துறை இணையமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் பங்கேற்கிறார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280801&reg=3&lang=1

(Release ID: 2280801)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2280850) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी