தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஒடிசாவின் கஞ்சம், கஜபதி, ராயகடா மாவட்டங்களில் மொபைல் நெட்வொர்க் தரத்தை டிராய் மதிப்பீடு செய்தது
प्रविष्टि तिथि:
02 JUL 2026 6:28PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் 2026 ஏப்ரலில், ஒடிசாவில் உள்ள கஞ்சம், கஜபதி, ராயகடா மாவட்டங்களில் நடத்தப்பட்ட சுதந்திரமான இயக்கச் சோதனையின் முடிவுகளை, பொதுவான தொலைத்தொடர்பு நுகர்வோரின் தகவலுக்காக வெளியிட்டுள்ளது. இந்த சோதனையின் நோக்கம், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படும் மொபைல் நெட்வொர்க் சேவைகளின் நிகழ்நேரத் தரத்தை மதிப்பிட்டு சரிபார்ப்பதாகும். இந்த சோதனையின் போது, கவரேஜ், அழைப்புத் துண்டிப்பு விகிதம், அழைப்பு இணைப்பு வெற்றி விகிதம், தரவு பதிவிறக்கம், பதிவேற்றம் போன்ற முக்கிய சேவைத் தர அளவுருக்களில் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் செயல்திறனை டிராய் பதிவு செய்கிறது. பின்னர் இந்த முடிவுகள், நுகர்வோருக்குத் தெரிவிக்கவும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தங்கள் சேவைகளை மேம்படுத்த ஊக்குவிக்கவும் வெளியிடப்பட்டுள்ளன.
டிராய், தனது நியமிக்கப்பட்ட முகமை மூலம், ஒடிசாவின் கஞ்சம், கஜபதி, ராயகடா மாவட்டங்களில், 23 ஏப்ரல் 2026 முதல் 25 ஏப்ரல் 2026 வரை 8 முக்கிய இடங்களில் சோதனைகளை நடத்தியது. இந்தச் சோதனைகள் ஹைதராபாத்தில் உள்ள டிராய் மண்டல அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280450®=3&lang=1
(Release ID : 2280450)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2280575)
आगंतुक पटल : 6