நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி இறக்குமதி தொடர்ந்து சரிவு - உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு

प्रविष्टि तिथि: 02 JUL 2026 5:08PM by PIB Chennai

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி ஏப்ரல் 2025-ல் 24.27 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், ஏப்ரல் 2026-ல் மொத்த நிலக்கரி இறக்குமதி 21.13 மில்லியன் டன்னாகக் குறைந்தது. இது சுமார் 12.95% சரிவாகும். இறக்குமதிக்கு மாற்றாக மின்சாரத் துறைக்கு உள்நாட்டு நிலக்கரி கிடைப்பதை அதிகரிப்பதற்கு நிலக்கரி அமைச்சகம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளின் நீடித்த தாக்கத்தையே இந்தச் சரிவு பிரதிபலிக்கிறது.

 

ஒட்டுமொத்த இறக்குமதி சார்பு நிலை குறைந்து வருகிறது. மொத்த நிலக்கரி நுகர்வில் நிலக்கரி இறக்குமதியின் பங்கு, ஏப்ரல் 2025-ல் 21.69%-ஆக இருந்தது. இது ஏப்ரல் 2026-ல் 19.68%-ஆகக் குறைந்துள்ளது. இது 2 சதவீதப் புள்ளிகளுக்கும் மேலான சரிவாகும்.

 

 ஒட்டுமொத்த இறக்குமதிப் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான சரிவானது, உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி, கொள்முதலை அதிகரித்தல், விநியோக இணைப்பை வலுப்படுத்துதல், அனல் மின் நிலையங்களின் கையிருப்பு நிலைகளை உன்னிப்பாகக் கண்காணித்தல்,  ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வது ஆகியவற்றில் நிலக்கரி அமைச்சகம் தொடர்ந்து கவனம் செலுத்துவதைப் பிரதிபலிக்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு நான் ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280389&reg=3&lang=1

(Release ID: 2280389)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2280536) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu