சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்தில் ஏற்பட்ட பெரும் பள்ளம் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கமளித்துள்ளது
प्रविष्टि तिथि:
02 JUL 2026 4:43PM by PIB Chennai
தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டது, 2026 ஜூலை 1 அன்று கண்டறியப்பட்டது. அதற்கு முந்தைய நாள் இரவு பெய்த மழைநீர் தேங்கியதால் இந்தப் பள்ளம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் நிரந்தர மழைநீர் வடிகால்வாய் செயல்பாட்டில் ஏற்பட்ட தடைகளும் இதற்கு கூடுதல் காரணமாகும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
2026 ஜூலை 1 அன்று அதிகாலையில் வழக்கமான ரோந்து பணிக்கு சென்ற குழுவினர், பாதிக்கப்பட்ட பகுதியை கண்டறிந்து உடனடியாக மீட்பு பணிகளை தொடங்கினர். முன்னுரிமை அடிப்படையில் சேதமடைந்த பகுதி சரி செய்யப்பட்டு, பாதுகாப்பான தடையில்லாத வாகனப் போக்குவரத்து உறுதி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து செய்து முடிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280364®=3&lang=1
****
TV/SMB/RJ/SH
(रिलीज़ आईडी: 2280521)
आगंतुक पटल : 7