பிரதமர் அலுவலகம்
பெங்களூருவில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
02 JUL 2026 4:32PM by PIB Chennai
பெங்களூருவில், கல் குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கல் குவாரியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதைக் கேட்டு வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
***
(Release ID: 2280347)
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2280502)
வருகையாளர் எண்ணிக்கை : 41
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam