தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

கொல்கத்தாவில் கட்டுமானத்தின் போது, 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு

இடுகை இடப்பட்ட நாள்: 02 JUL 2026 3:02PM by PIB Chennai

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தரதலா பகுதியில் கிடங்கு கட்டுமானப் பணியின்போது, ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளில் சிக்கி, 5 தொழிலாளர்கள் உயிரிழந்ததோடு, 20 பேர் காயமடைந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் 12 முதல் 15 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

2026 ஜூன் 25 அன்று வெளியான ஊடகச் செய்திகள் அடிப்படையில் இது குறித்து இரண்டு வாரகாலத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு மேற்குவங்க தலைமைச் செயலாளர், கொல்கத்தா காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விசாரணை நிலவரம், உயிரிழந்த, காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்கப்பட்டிருந்தால் அதுபற்றிய விவரம் அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280285&reg=3&lang=1

***

SS/SMB/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2280495) வருகையாளர் எண்ணிக்கை : 49
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी