தேசிய மனித உரிமைகள் ஆணையம்
உத்தரப்பிரதேசத்தில் 12 கொத்தடிமைகள் துன்புறுத்தப்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு
प्रविष्टि तिथि:
02 JUL 2026 3:11PM by PIB Chennai
உத்தரப்பிரதேசத்தின் முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள மண்டி கிராமத்தில் காகித தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் போதிய உணவோ, ஊதியமோ தராமல் நள்ளிரவு வரை வேலை செய்ய 12 கொத்தடிமைகள் நிர்பந்திக்கப்பட்டதாக வெளியான ஊடகச் செய்திகள் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்தத் தொழிற்சாலையிலிருந்து தப்பி வந்த ஒருவர், தித்தாவி காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், மற்ற தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இவர்களுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டபோது, பலவகையில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டது தெரியவந்தது. ஒரு நபர் இறந்ததையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். மேலும் இறப்புகள் உள்ளதா என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து முசாஃபர்நகர் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280288®=3&lang=1
***
SS/SMB/RJ/SH
(रिलीज़ आईडी: 2280488)
आगंतुक पटल : 7