நிலக்கரி அமைச்சகம்
ஜூன் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி தொடர்ந்து அதிகரிப்பு
प्रविष्टि तिथि:
02 JUL 2026 2:59PM by PIB Chennai
நாட்டில் நிலக்கரிச் சுரங்கத் துறை, ஜூன் 2026-ல் வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்ததுடன், கடந்த மாதத்தில் அதிக உற்பத்தியையும் விநியோகத்தையும் பதிவு செய்துள்ளது.
ஜூன் 2026-ல், நிறுவனங்களின் சொந்த சுரங்கங்கள், வணிகச் சுரங்கங்கள் ஆகிய இரண்டில் இருந்தும் நிலக்கரி உற்பத்தி 17.88 மில்லியன் டன்களாக இருந்தது. அதே நேர்ந்தால் நிலக்கரி விநியோகம் 18.55 மில்லியன் டன்னை எட்டியது. ஜூன் 2025-ல் நிலக்கரி உற்பத்தி 15.56 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், தற்போதைய உற்பத்தி 14.9% அதிகரித்துள்ளது.
2026–27-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், அதாவது ஏப்ரல் முதல் ஜூன் 2026 வரை, ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.35% அதிகரித்துள்ளது. இந்தக் காலாண்டில் நிலக்கரி விநியோகமும், ஆண்டு வளர்ச்சி அடிப்படையில் 1.70% உயர்வைப் பதிவு செய்துள்ளது.
இந்தச் செயல்திறன், சுரங்கச் செயல்பாடுகள், திறன் அதிகரிப்பு, உற்பத்தித் திட்டமிடல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றங்களைப் பிரதிபலிக்கிறது.
இத்துறையின் முன்னேற்றத்திற்குக் கொள்கை சீர்திருத்தங்கள், எளிய ஒழுங்குமுறை வசதிகளை ஏற்படுத்தித் தருதல் ஆகியவையே காரணம் என நிலக்கரி அமைச்சகம் கூறுகிறது. இந்த முயற்சிகள், சரியான நேரத்தில் செயல்பாட்டு அனுமதிகளைப் பெறவும், நிலக்கரி உற்பத்தியையும் விநியோகத்தையும் வலுப்படுத்தவும் வழிவகுத்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280284®=3&lang=1
***
(Release ID : 2280284)
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2280487)
आगंतुक पटल : 10