அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

விரிசலற்ற இரு-உலோகக் கட்டமைப்பை உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை

प्रविष्टि तिथि: 02 JUL 2026 4:18PM by PIB Chennai

இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் கூட்டு உற்பத்தி தொழில்நுட்பத்தின் மூலம் விரிசலற்ற இரு உலோகக் கட்டமைப்பை ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஹைதராபாத் சர்வதேச மேம்பட்ட தூள் உலோகம், புதிய பொருட்கள் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் லேசர் சார்ந்த பவுடர் பெட் ஃபியூஷன் தொழில்நுட்பத்தை இதற்காகப் பயன்படுத்தியுள்ளனர். எஸ்எஸ்316எல் துருப்பிடிக்காத எஃகு, இன்கோனல் சூப்பர்அலாய் ஐஎன்718 ஆகியவற்றை இணைத்து இரு உலோகக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். விண்வெளியிலும், அணுசக்தி நிலையங்களிலும் பயன்படுத்தப்படும் அதிக விலை கொண்ட சூப்பர்அலாய் இறக்குமதியை குறைக்க இது பெரிதும் உதவும்.  எஸ் நாராயணசாமி, குருராஜ் தேலசங், நோகுன் பார்க், ரவி பாத்தே ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த புதிய தொழில்நுட்பம் விண்வெளித் துறையில் அதிக வெப்பநிலை தாங்கும் பகுதிகளிலும், அணு உலைகள், எண்ணெய், எரிவாயு பதப்படுத்தும் தொழில்களிலும் பயன்படுத்த உகந்தது. தீவிர வெப்பம் நிலவும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சூப்பர்அலாய்களைப் பயன்படுத்த இந்த கூட்டு உற்பத்தி முறை வழிவகை செய்வதால் இறக்குமதியைச் சார்ந்திருப்பது குறையும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280333&reg=3&lang=1

****

TV/PD/SH

 


(रिलीज़ आईडी: 2280466) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी