வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான கடல் உணவு தயாரிப்பு இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் 2-வது பரிசு பெற்றார்

प्रविष्टि तिथि: 02 JUL 2026 11:55AM by PIB Chennai

கேரளத்தின் கொச்சியில் புதன் அன்று (01.07.2026) நடைபெற்ற இந்திய கடல் உணவு கண்காட்சி 2026-ல் கடல் உணவு மதிப்புக் கூட்டுதல் குறித்த இரண்டாவது தேசிய திறன் ஒலிம்பியாட் இறுதிப் போட்டி நடைபெற்றது. சமையல் திறன், தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான இந்தப் போட்டியில் ஆந்திரப்பிரதேசத்தின் காக்கிநாடாவில் உள்ள தேவி ஃபிஷரிஸ் நிறுவனத்தின் பி சூர்யாதேவி முதல் பரிசு பெற்றார். தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள தேவா நிறுவனத்தின் முத்துக்குமரன் இரண்டாவது பரிசையும், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள எஸ் எஸ் சீஃபுட்ஸ் நிறுவனத்தின் சகாரிகா சர்தார் மூன்றாவது பரிசையும், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள சபரி ஃபுட் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் பராசராணி ஜீனா நான்காவது பரிசையும் பெற்றனர். 

முதல் பரிசு ரூ.1,00,000, இரண்டாவது பரிசு ரூ.75,000, மூன்றாவது பரிசு ரூ.50,000, நான்காவது பரிசு ரூ.25,000 என வழங்கப்பட்டது. பரிசுத்தொகையை கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத் தலைவர் திரு பி ஜவகர், இயக்குநர் டாக்டர் ராம்மோகன், செயலாளர் டாக்டர் ஜிபின் குமார், தலைமை விருந்தினரும், இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான கே. என். ராகவன் உள்ளிட்டோர் வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பரிசு, பதக்கம், சான்றிதழ்களை வழங்கினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280209&reg=3&lang=1

***

SS/SMB/RJ/KR


(रिलीज़ आईडी: 2280232) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी