தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் மொபைல் நெட்வொர்க் தரத்தை டிராய் பரிசோதித்தது
प्रविष्टि तिथि:
01 JUL 2026 12:47PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் கடந்த மார்ச் மாதம் மொபைல் நெட்வொர்க் தரப் பரிசோதனையை நடத்தியது. இது தொடர்பான விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் குரல் அழைப்பு, இணையச் சேவைகளின் தரம் தொடர்பாக இதில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
இந்தச் சோதனையின் போது, நெட்வொர்க் சிக்னல் கிடைக்கும் தன்மை, அழைப்பு துண்டிப்பு வீதம், தரவு பதிவிறக்க வேகம் போன்ற முக்கிய காரணிகள் சோதிக்கப்பட்டன. நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மொபைல் சேவைகளை மேம்படுத்த நிறுவனங்களை ஊக்குவிக்கவும் இந்த விவரங்கள் வெளியிடப்படுகின்றன.
டிராய் பெங்களூரு பிராந்திய அலுவலகத்தின் நேரடி மேற்பார்வையில், கடந்த மார்ச் 17 முதல் மார்ச் 20 வரை உடுப்பி மாவட்டத்தில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. நகரங்கள், பொது போக்குவரத்து மையங்கள் போன்ற பல்வேறு பயன்பாட்டுச் சூழல்களில், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி நெட்வொர்க் சேவைகளின் நேரடிச் செயல்திறனை மேம்பட்ட மென்பொருள் அமைப்புகள் மூலம் இந்த ஆய்வு மதிப்பீடு செய்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279722®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2280070)
आगंतुक पटल : 7