பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தென்மேற்குப் படைப்பிரிவின் தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மோஹித் மல்ஹோத்ரா பொறுப்பேற்றுக் கொண்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUL 2026 3:04PM by PIB Chennai

தென்மேற்குப் படைப்பிரிவின் தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மோஹித் மல்ஹோத்ரா பொறுப்பேற்றுக் கொண்டார்.

1989-ம் ஆண்டு ஜூன் மாதம் 47 ஆர்மர் ரெஜிமென்டில் அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார். கட்டளை, பணியாளர், பயிற்சி ஆகிய அனைத்து முக்கிய நிலைகளிலும் 37 ஆண்டுகளுக்கு மேலாக அவர் சிறப்பாக பணியாற்றியுள்ளார். இதற்கு முன்னதாக கிழக்கு கட்டளைப் பிரிவின் தலைமையகத்தின் தளபதியாக பணியாற்றியுள்ளார். 

சியாச்சின் பனிப்பாறை, ஆர்மர் ரெஜிமென்ட், பாலைவனப் படைப்பிரிவு உள்ளிட்ட ராணுவத்தின் சவால்மிக்க சூழல்களில் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அத்துடன் செயல்பாட்டுத் திட்டமிடல், ராணுவ உளவுத்துறை, தளவாடங்கள், பணியாளர் மேலாண்மை, உத்திசார்ந்த தகவல் தொடர்பு ஆகிய முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய பின்னணியைக் கொண்டவராவார்.

லெப்டினன்ட் ஜெனரல் மோஹித் மல்ஹோத்ரா பாதுகாப்புத் தொடர்பான படிப்புகளில் இரண்டு முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அவற்றில் ஒன்று லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பெற்றதாகும். அத்துடன் அரசியல் அறிவியல், பாதுகாப்பு மற்றும் உத்திசார்ந்த ஆய்வுகளில் இரண்டு எம்பில் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279817&reg=3&lang=1

****

TV/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2280051) வருகையாளர் எண்ணிக்கை : 58
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी