உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
உணவுப் பதனப்படுத்துதல் சார்ந்த நவீன தொழில் புத்தாக்க வளர்ச்சி மையத்தை மத்திய அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
01 JUL 2026 2:43PM by PIB Chennai
தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ், மகாராஷ்டிர மாநிலம் பார்பானியில் உள்ள வசந்த்ராவ் நாயக் மராத்வாடா வேளாண் பல்கலைக்கழகத்தின் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரியில், மத்திய உணவுப் பதனப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன தொழில் புத்தாக்க வளர்ச்சி (இன்குபேஷன்) மையத்தை மத்திய உணவுப் பதனப்படுத்துதல் தொழில்கள் துறை அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் ஜூன் 28 அன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், விவசாய விளைபொருட்களுக்கு மதிப்புக் கூட்டுவதன் மூலம் விவசாயிகளின் வருவாயை உயர்த்த முடியும் என்றார். உணவுப் பதனப்படுத்துதல் துறையின் வளர்ச்சி, உணவு வீணாவதைக் குறைப்பதுடன் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் எனத் தெரிவித்தார். தரமான உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து, சர்வதேச அளவிலான போட்டித்தன்மையுடன் கூடிய பொருட்களை தயாரிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279801®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2280031)
आगंतुक पटल : 8