விவசாயத்துறை அமைச்சகம்
பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பான உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
16 JUN 2026 10:39PM by PIB Chennai
பயிர்க்கழிவுகள் எரிக்கப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பான உயர்நிலைக் கூட்டம் மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் ஆகியோர் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது.
வைக்கோல் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைவதோடு நிலத்தின் வளமும் பாதிக்கப்படுகிறது. இப்பிரச்சனையை எதிர்கொள்ள 2026-27 நிதியாண்டிற்கு 544.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 46,000-க்கும் மேற்பட்ட வைக்கோல் மேலாண்மை இயந்திரங்களை விநியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 141 வைக்கோல் விநியோகத் திட்டங்கள் உருவாக்கப்படும்.
தேசிய தலைநகர் பிராந்தியத்தின் 14 மாவட்டங்களில் உள்ள 70 வட்டங்களில் 'வைக்கோல் பாதுகாப்புப் படை' இப்பிரச்சனையைத் தீவிரமாகக் கண்காணிக்கும். இதன் மூலம் வைக்கோல் எரிப்புச் சம்பவங்கள் பெருமளவு குறைக்கப்படும்.
பயிர்க்கழிவுகளை எரிப்பதைத் தவிர்த்து, அவற்றை மண்ணில் மக்கச் செய்வதன் மூலம் நெல் உற்பத்தித் திறன் அதிகரிப்பது குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர்கள் வலியுறுத்தினர். வேளாண் கழிவுகளைப் பொருளாதார வளங்களாக மாற்றி, விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273815®=3&lang=1
***
SS/PD
(रिलीज़ आईडी: 2279723)
आगंतुक पटल : 27