அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியாவின் முதலாவது தொடுதலற்ற பளு அளவீட்டு தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த மத்திய அரசு நிதி உதவி

प्रविष्टि तिथि: 30 JUN 2026 4:05PM by PIB Chennai

நாட்டின் முதலாவது தொடுதலற்ற பளு அளவீட்டு முறையை வணிகமயமாக்க மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், மும்பையின் பியூர்ட்ரானிக்ஸ் இந்தியா தனியார் நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்கியுள்ளது. நாட்டின் தொழில்முறை ஆட்டோமேஷன் துறையில் நிலவும் தொழில்நுட்ப இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் இந்த உதவி அளிக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் தொடுதலற்ற கணினி புரோகிராமிங் அடிப்படையிலான இந்தியாவின் முதலாவது பளு அளவீட்டு அமைப்பை வணிகமயமாக்க இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மின்தூக்கிகள், கிரேன்கள், தொழில்துறை ஆட்டோமேஷன் போன்ற பாதுகாப்பு சார்ந்த பயன்பாடுகளுக்காக இந்த உள்நாட்டு பளு உணர் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன காந்த உணரி தொழில்நுட்பம், அதிர்வுகளைத் தாங்கும் திறன் கொண்டது. இது வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களுக்கு மாற்றாக அமைந்து, தற்சார்பு இந்தியா தொலைநோக்கு பார்வைக்கு வலுசேர்க்கும். இத்தகைய உள்நாட்டு கண்டுபிடிப்புகள் நாட்டின் உற்பத்தி போட்டித்திறனை மேம்படுத்தும் என்று தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் பாதக் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279369&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2279538) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी