புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பேராசிரியர் பி. சி. மஹலனோபிஸின் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சார்பாக 20-வது புள்ளியியல் தினக் கொண்டாட்டம்

प्रविष्टि तिथि: 29 JUN 2026 7:18PM by PIB Chennai

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் , 2026 ஜூன் 29 அன்று புததில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 20-வது புள்ளியியல் தினத்தைக் கொண்டாடியது. இந்தியாவின் நவீன புள்ளியியல் அமைப்புமுறையை உருவாக்கியவரும், பொருளாதாரத் திட்டமிடலில் முன்னோடியாகத் திகழ்ந்தவருமான பேராசிரியர் பிரசந்த சந்திர மஹலனோபிஸின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் புள்ளியியல் தினம் கொண்டாடப்படுகிறது.

 

 

"நிர்வாகத் தரவுகளின் ஆற்றலை முழுமையாக வெளிக்கொணர்தல்" என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு புள்ளியியல் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில், பிரதமரின் முதன்மைச் செயலாளர்  டாக்டர் பி. கே. மிஸ்ரா  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ராவ் இந்தர்ஜித் சிங், அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சவுரப் கார்க் மற்றும் தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் டாக்டர் சைபால் சட்டோபாத்யாய் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 

 

விழாவில் பேசிய டாக்டர் பி. கே. மிஸ்ரா, தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதற்குப் பிரதமர் அளித்து வரும் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தினார். புள்ளியியல் சமூகத்திற்குச் சில முக்கிய நிறுவன இலக்குகளை அவர் முன்வைத்தார்: தரவு தனியுரிமை மற்றும் பொது நம்பிக்கைக்கு முன்னுரிமை அளித்தல்; பாரம்பரிய கள ஆய்வுகளிலிருந்து நிர்வாகப் பதிவுகளுக்கு முக்கியத்துவம் மாறும் நிலையில், நிறுவனத்தின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல்; மேலும், கொள்கைக் குறைபாடுகளை நீக்குவதற்கான பகுப்பாய்வுக் கட்டமைப்புகளை உருவாக்க, தணிக்கைத்தன்மை, விளக்கத்தன்மை மற்றும் தரவின் தோற்றம் போன்ற கடுமையான ஆளுகைக் கட்டமைப்புகளுடன் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல்.

 

 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங், டாக்டர் பி.கே. மிஸ்ரா முன்வைத்த தொலைநோக்குப் பார்வையை வரவேற்றதுடன், நம்பகமான, மாற்றங்களுக்கு உட்படாத தரவுகள் மற்றும் அமைப்புமுறையின் எதிர்கால வளர்ச்சி குறித்த தெளிவான தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் பிரதமர் அலுவலகம்  வகுத்துள்ள ஊக்கமளிக்கும் கட்டமைப்பு, ஒரு முக்கியமான செயல்முனைப்புக்கான அழைப்பாக அமைந்துள்ளது என்று கூறினார்.  2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை அடைவதற்கான தெளிவான பாதையை சிறப்பு விருந்தினர் வகுத்துத் தந்துள்ளார் என்றும், பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், இந்த முக்கியக் கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்னெடுத்துச் செல்லுமாறும் தொழில்முறைச் சமூகத்தினரை அவர் கேட்டுக்கொண்டார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279114&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2279227) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu