சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரத்த சோகை இல்லாத இந்தியா இயக்கம்: மத்திய அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா வழிகாட்டுதல்களை வெளியிட்டார்

प्रविष्टि तिथि: 29 JUN 2026 5:49PM by PIB Chennai

மத்திய சுகாதார, குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா, புதுதில்லி விக்ஞான் பவனில் நடைபெற்ற மத்திய சுகாதார, குடும்ப நலக் கவுன்சிலின் 16-வது கூட்டத்தில், ரத்த சோகை இல்லாத இந்தியா இயக்கத்திற்கான புதிய செயல்பாட்டு வழிகாட்டுதல்களை இன்று வெளியிட்டார்.

ரத்த சோகையை முற்றிலும் ஒழிப்பதை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் வெறும் சத்து மாத்திரைகள் வழங்குவதோடு நின்றுவிடாமல், பரிசோதனை, சிகிச்சை மேலாண்மை, சரியான உணவு முறை, விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் பொதுமக்களின் பங்களிப்பை உள்ளடக்கிய விரிவான திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

தற்போதுள்ள உத்திகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள் புதிய பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், ரத்த சோகை பாதிப்பைக் கண்டறிந்து, தொடர்ந்து சிகிச்சையளிக்க 'பரிசோதனை, சிகிச்சை, ஆலோசனை, கண்காணிப்பு' என்ற புதிய அணுகுமுறை இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சேவைகளை டிஜிட்டல் முறையில் கண்காணிக்கவும், பகுப்பாய்வு செய்யவும் ரத்த சோகை இல்லாத இந்தியா இயக்கத்திற்கான ஒருங்கிணைந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாய், குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279050&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2279119) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी