PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியாவின் டிஜிட்டல் கற்றல் சூழலுக்கு ஆற்றலை அதிகரிக்கும் தீக்‌ஷா

प्रविष्टि तिथि: 28 JUN 2026 12:06PM by PIB Chennai

அறிவுப் பகிர்வுக்கான டிஜிட்டல் உட்கட்டமைப்பு தளமான தீக்‌ஷா (DIKSHA) என்பது, நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல மொழிகளில், உயர்தரமான, பாடத்திட்டத்துடன் டிஜிட்டல் கற்றல் பொருட்களை எளிதாக அணுக வகை செய்யும் தளமாகும். இது, இணையவழியாகக் கற்றலின் தொடர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கல்வி அமைச்சகத்தின் இ-வித்யா முன்முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாகும். தீக்‌ஷா (DIKSHA), பள்ளிக் கல்விக்கான நாட்டின் ' ஒரே தேசம், ஒரே டிஜிட்டல் தளம்' என்று அழைக்கப்படுகிறது . 2017-ல் தொடங்கப்பட்ட இது, தேசிய கல்வி ஆராய்ச்சி - பயிற்சி மன்றத்தால், மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

தீக்‌ஷாவை வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்பத் தனிப்பயனாக்க முடியும் என்பதால், இது ஏறக்குறைய அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பல்வேறு கல்வி வாரியங்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது அடிப்படை எழுத்தறிவு முதல் மேல்நிலைக் கல்வி வரை முழுமையான கற்றலுக்கான டிஜிட்டல் கற்றல் அம்சங்களை வழங்குகிறது.

தீக்‌ஷா தளமானது, தொழில்நுட்பம், புதுமை ஆகியவற்றின் மூலம் ஒரு ஆற்றல்மிக்க கற்றல் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பல்வேறு கற்றல் தேவைகளுக்கேற்ப, எளிதில் அணுகக்கூடிய, தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை ஊக்குவிக்கிறது.

இந்தத் தளம், கருத்துருத் தெளிவை மேம்படுத்தவும் பல்வேறு கற்றல் பாணிகளுக்கு ஏற்றவாறும் வடிவமைக்கப்பட்ட, 2டி/3டி அனிமேஷன்கள், ஏஆர் அனுபவங்கள், உருவகப்படுத்துதல்கள், மெய்நிகர் ஆய்வகங்கள், சைகை மொழி காணொலிகள் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. தடையற்ற வகுப்பறை அனுபவத்திற்காக, என்சிஇஆர்டி புத்தகங்கள், காணொலிகளுடனும், ஆசிரியர் வழிகாட்டிகளுடனும் இணைந்த க்யூஆர் குறியீட்டுப் புத்தகங்களாக உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்காக, இது டிஜிட்டல் முறையில் சைகை மொழி காணொலிகள் போன்ற உள்ளடக்கிய அம்சங்களையும் வழங்குகிறது.

தீக்‌ஷா , வரம்பற்ற பயிற்சிக் கேள்விகள், விரிவான தீர்வுகள், தகவமைப்பு மதிப்பீடுகள், திறன் அடிப்படையிலான வினா வங்கிகள் ஆகியவை மூலம் தனிப்பயனாக்கப்பட்ட கற்றலை மேம்படுத்துகிறது.  உள்ளடக்க உருவாக்கம், தொகுத்தல், பகுப்பாய்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த ஒருங்கிணைந்த சூழலமைப்பு, தேசிய கல்விக் கொள்கை 2020- க்கு இணங்க , அனைவரையும் உள்ளடக்கிய, தரவு சார்ந்த, மகிழ்ச்சியான கற்றலை ஊக்குவிக்கிறது.

நாடு முழுவதும் இதில் 1.25 கோடி பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் இதில் 5.55 லட்சம் பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர்.

கல்வித்துறை டிஜிட்டல் முறையைத் தழுவி வரும் நிலையில், தீக்‌ஷா தளமானது இதில் கற்பித்தல், கற்றல் ஆகியவற்றை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இது நாடு முழுவதும் கல்வி மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய உந்துசக்தியாகத் திகழ்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278569&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2278588) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी