ஜல்சக்தி அமைச்சகம்
நீர் சேமிப்பு தொடர்பான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
प्रविष्टि तिथि:
25 JUN 2026 8:37PM by PIB Chennai
ஜல் சஞ்சய் ஜன் பகிதாரி (JSJB) 2.0 எனப்படும் நீர் சேமிப்பு தொடர்பான மக்கள் இயக்கத்தின் இரண்டாம் கட்ட முன்முயற்சியின் கீழ் அறிவிக்கப்பட்ட நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல், நிலத்தடி நீர் சேமிப்புப் பணிகள் ஆகியவை குறித்து நாடு முழுவதிலுமுள்ள மக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளத்தை வழங்கும் வகையில், ஜல் சக்தி அமைச்சகம் ஜேஎஸ்ஜேபி 2.0 இணையதளத்தில் மக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடுவை 31 ஜூலை 2026 வரை நீட்டித்துள்ளது. இதன் மூலம், இந்த முன்முயற்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள், தங்கள் கருத்துக்களை இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.
பொதுமக்களின் தீவிரப் பங்கேற்பின் மூலம் நீர் சேமிப்பை ஒரு உண்மையான மக்கள் இயக்கமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு , குஜராத்தின் சூரத் நகரில் 6 செப்டம்பர் 2024 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் நாடு தழுவிய நீர் சேமிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. இதை முன்னெடுத்துச் செல்வதில், ஜேஎஸ்ஜேபி-யின் (JSJB) இரண்டாம் கட்டம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. 31 மே 2026 நிலவரப்படி , இந்த முன்முயற்சியின் கீழ் நாடு முழுவதும் 1.5 கோடிக்கும் அதிகமான மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல், நீர் சேமிப்பு, நீர்த்தேக்கக் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள், உள்ளூர் சமூகங்கள், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள், அரசு முகமைகள், குடிமைச் சமூக அமைப்புகள், பிற தரப்பினரின் கூட்டு முயற்சிகளார் ஜேஎஸ்ஜேபி (JSJB), நீர் பாதுகாப்புக்கான ஒரு நாடு தழுவிய மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278018®=3&lang=1
(Release ID : 2278018)
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2278277)
आगंतुक पटल : 10