தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
கனமழை, மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவுகளுக்கு மத்தியில், அருணாச்சலப் பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களில் உள்வட்ட ரோமிங் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
25 JUN 2026 7:54PM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் பெய்த கனமழை, மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகளால் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தொலைத்தொடர்பு சேவைகள் தடையின்றித் தொடர்வதை உறுதி செய்ய மத்திய தொலைத்தொடர்புத் துறை விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் கேயி பன்யோர், லோயர் சுபன்சிரி, அப்பர் சுபன்சிரி மற்றும் வெஸ்ட் சியாங் ஆகிய 4 மாவட்டங்களில் முதற்கட்டமாக மூன்று நாட்களுக்கு உள்வட்ட ரோமிங்கை (Intra-Circle Roaming -ICR) செயல்படுத்துமாறு அனைத்துத் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியது.
ஐசிஆர் சேவை செயல்படுத்தப்படுவதன் மூலம், இதை வழங்கும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் சந்தாதாரர்கள், தங்கள் சொந்த வலையமைப்பு தற்காலிகமாகச் செயல்படாத இடங்களில், சேவை கிடைக்கக்கூடிய மற்றொரு வலையமைப்பை தானாகவே பயன்படுத்திக்கொள்ள முடியும். நாட்டின் பிற பகுதிகளிலிருந்து இப்பகுதிகளுக்கு வரும் சந்தாதாரர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும். இந்த நடவடிக்கை, பாதிக்கப்பட்ட மக்கள், பேரிடர் மீட்புக் குழுக்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நிவாரணம், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு முகமைகள் ஆகியோருக்கான தகவல் தொடர்பு வசதியை கணிசமாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைத்தொடர்புத் துறை தனது களப்பிரிவுகள் மூலம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகளை விரைவாகச் சீரமைக்கத் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277997®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2278070)
आगंतुक पटल : 8