தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இந்திய தொலைத்தொடர்புத் துறை: 2026 மே மாதம் சந்தாதாரர்கள் அதிகரிப்பு
प्रविष्टि तिथि:
25 JUN 2026 6:23PM by PIB Chennai
மே 2026-ல் இந்தியாவின் தொலைத்தொடர்புத்துறை வளர்ச்சி கண்டுள்ளது. தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஏப்ரலில் 48.58 மில்லியனாக இருந்த நிலையில், மே மாத இறுதியில் 48.64 மில்லியனாக உயர்ந்துள்ளது . இதன் ஒட்டுமொத்த விகிதம் 3.405% ஆக உள்ளது; இதில் நகர்ப்புறப் பங்கு 89.13% ஆகவும், கிராமப்புறப் பங்கு 10.87% ஆகவும் உள்ளது. பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் 18.40% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன.
மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1288.96 மில்லியனிலிருந்து 1294.46 மில்லியனாக அதிகரித்துள்ளது (0.43% வளர்ச்சி). இதில் நகர்ப்புறச் சந்தாதாரர்கள் 744.36 மில்லியனாகவும், கிராமப்புறச் சந்தாதாரர்கள் 550.11 மில்லியனாகவும் உயர்ந்துள்ளனர். கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் சந்தாதாரர் வளர்ச்சி விகிதம் (0.62%) சற்று அதிகமாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277922®=3&lang=1
செய்தி அடையான எண்:2277922
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2278065)
आगंतुक पटल : 11