இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகத்தின் செயல்பாடுகள்: மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு

प्रविष्टि तिथि: 25 JUN 2026 5:47PM by PIB Chennai

தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகத்தின் செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்றது.

தேசிய அளவிலான விளையாட்டுகள், கேலோ இந்தியா போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் கட்டாய ஊக்கமருந்து எதிர்ப்பு விழிப்புணர்வு அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என அவர் குறிப்பிட்டார். விழிப்புணர்வை வலுப்படுத்த 'உங்கள் மருந்தை அறிந்துகொள்ளுங்கள்' என்ற கைப்பேசி செயலி பிராந்திய மொழிகளில் உருவாக்கப்படும் என்றார்.

சர்வதேச வீரர்களின் மாதிரிகளைப் பரிசோதிக்கும் திறனை மேம்படுத்த இந்த ஆய்வகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. கிராமங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அடிமட்ட அளவில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் கூறினார். இந்த நிகழ்வில் பீகார் விளையாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரேயசி சிங், மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277877&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2278054) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati