எஃகுத்துறை அமைச்சகம்
இந்தியாவின் எஃகுத் துறை 2026 மே மாதத்தில் சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது
प्रविष्टि तिथि:
25 JUN 2026 6:40PM by PIB Chennai
2026 மே மாதத்தில் கச்சா எஃகு உற்பத்தி 14.1 மில்லியன் டன்னாக பதிவானது. இது கடந்த ஆண்டு மே மாதத்தில் பதிவான 13.8 மில்லியன் டன்னைவிட 1.9% அதிகமாகும். 2026 ஏப்ரல் மே காலகட்டத்தில் பதிவான 28 மில்லியன் டன் கச்சா எஃகு, 2025-ம் ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 27.3 மில்லியன் டன்னைவிட 2.6% அதிகமாகும். இதேபோல ஹாட் மெட்டல் உற்பத்தி, கடந்த ஆண்டு மே மாதத்தில் பதிவானதை விட 1.1%மும், ஏப்ரல்-மே காலத்தின் உற்பத்தி ஆண்டுக்கு 2.2%மும் வளர்ச்சி கண்டுள்ளது. முழுமை பெற்ற எஃகின் உற்பத்தி மே மாதத்தில் 6.8% ஆண்டு வளர்ச்சியையும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான தை விட ஏப்ரல்-மே மாதங்களில் 5.9% வளர்ச்சியையும் பதிவு செய்வது.
ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம், பெல்ஜியம், நேபாளம் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள், 2026 ஏப்ரல்-மே மாதங்களில் இந்திய எஃகின் சிறந்த ஐந்து இறக்குமதி தளங்களாகப் பதிவாகின. இவற்றில் அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 16.1% ஏற்றுமதி செய்யப்பட்டது. இறக்குமதியைப் பொருத்தவரை சீனா, கொரியா, ஜப்பான், வியட்நாம் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து பெரும்பாலான எஃகு இறக்குமதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக சீனாவில் இருந்து 31.3% இறக்குமதி பதிவானது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277931®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2278053)
आगंतुक पटल : 8