தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கோடைகாலப் பயிற்சி முகாம் நிறைவு
प्रविष्टि तिथि:
25 JUN 2026 6:10PM by PIB Chennai
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நான்கு வார கால கோடைகாலப் பயிற்சி முகாம் புதுதில்லியில் இன்று நிறைவடைந்தது. நாடு முழுவதும் இருந்து விண்ணப்பித்த 1,768 மாணவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 96 மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
நிறைவு விழாவில் உரையாற்றிய ஆணையத்தின் பொதுச் செயலாளர் பாரத் லால், மாணவர்கள் பயிற்சியின் மூலம் பெற்ற அனுபவங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, தங்கள் வாழ்வின் இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப வளர்ந்து வரும் சூழலில், இளைஞர்கள் தங்கள் துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பு குறித்துப் பேசிய இணைச் செயலாளர் சைடிங்புயீ சக்சுவாக், மாணவர்கள் மனித உரிமைகளின் பன்முகத்தன்மையை ஆராயவும், களப்பயணங்கள் மற்றும் ஆய்வுகள் மூலம் சமூக நீதி குறித்த புரிதலை மேம்படுத்தவும் இந்த முகாம் உதவியதாகத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277902®=3&lang=1
செய்தி அடையான எண்:2277902
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2278048)
आगंतुक पटल : 6