அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தொழில்நுட்பம் சார்ந்த நவீன போர் முறைகள் நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பை மறுவரையறை செய்து வருகின்றன: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
25 JUN 2026 2:10PM by PIB Chennai
தொழில்நுட்பம் சார்ந்த நவீன போர் முறைகள் நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புக் கட்டமைப்பையும் மறுவரையறை செய்து வருவதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கல்லூரியின் மூத்த அதிகாரிகள், பயிற்சி மாணவர்களிடையே சிறப்புரையாற்றிய அவர், எதிர்கால பாதுகாப்பு கட்டமைப்பு செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், விண்வெளித் திறன்களின் ஒருங்கிணைப்பால் வடிவமைக்கப்படும் என்றார்.
கடந்த பத்தாண்டுகளில், பாதுகாப்புத் துறையில் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, தற்சார்பு நிலை, உள்நாட்டுக் கண்டுபிடிப்புகளை நோக்கி இந்தியா முன்னேறியுள்ளது என்று தெரிவித்தார். பாதுகாப்புத்துறை உற்பத்தி 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 174 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், உற்பத்தி, தொழில்நுட்ப மேம்பாட்டில் 16,000-க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், நூற்றுக்கணக்கான புத்தொழில் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அரசு நிறுவனங்கள், தொழில்துறையினர், கல்வித்துறையினர், புத்தொழில் நிறுவனங்கள் ஆகியோரிடையே கூட்டு ஒத்துழைப்பு அவசியமாகும் என்று அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார். நமது அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆய்வகங்களிலிருந்து பயன்பாட்டிற்கு வரும்போது, அது நாட்டின் பாதுகாப்புத் திறனை மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் என்று அவர் பெருமையுடன் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277724®=3&lang=1
***
SS/PD/RJ
(रिलीज़ आईडी: 2277914)
आगंतुक पटल : 7