சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இரத்தம், இரத்தக் கூறுகளின் தரத்தை உறுதி செய்வதற்கான தேசிய மாநாட்டை இந்திய மருந்தியல் ஆணையம் நடத்தியது
प्रविष्टि तिथि:
24 JUN 2026 9:01PM by PIB Chennai
மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான இந்திய மருந்தியல் ஆணையத்தின் காசியாபாத் வளாகத்தில் "ஐபி 2026 தரநிலைகள் மூலம் இரத்தம், இரத்தக் கூறுகளின் தரத்தை உறுதி செய்தல்" என்ற தலைப்பில் தேசிய மாநாட்டை இன்று நடத்தியது. இந்திய மருந்தியல் 2026-ல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரத்தம், இரத்தக் கூறுகளின் தரநிலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த இரத்த மைய வல்லுநர்கள், கட்டுப்பாட்டாளர்கள், சுகாதார அதிகாரிகள் உட்பட 160-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
மத்திய சுகாதார, குடும்ப நலத்துறை இணைச் செயலாளர் திரு ஹர்ஷ் மங்லா காணொலி வாயிலாக உரையாற்றினார். இரத்தம், இரத்தக் கூறுகளுக்கென பிரத்யேகத் தரநிலைகளை ஐபி 2026-ல் அறிமுகப்படுத்தியதற்காக ஆணையத்தின் முயற்சிகளை அவர் பாராட்டினார். நோயாளிகளின் நலனைப் பாதுகாக்கவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும், இரத்தத்தின் தரம், பாதுகாப்பு, கிடைக்கும்தன்மையை உறுதி செய்ய அனைத்துப் பங்குதாரர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277579®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2277610)
आगंतुक पटल : 16