ஜல்சக்தி அமைச்சகம்
கங்கை நதிப் படுகையில் உள்ள 63 நகரங்களில் நகர்ப்புற நதி மேலாண்மைத் திட்டங்களை தேசிய தூய்மை கங்கை இயக்கம் தீவிரப்படுத்துகிறது
प्रविष्टि तिथि:
24 JUN 2026 5:35PM by PIB Chennai
ஆறுகளை மையமாகக் கொண்ட நகர்ப்புறத் திட்டமிடலை நோக்கிய ஒரு முக்கிய மைல்கல்லாக, தேசிய தூய்மை கங்கை இயக்கம், நகர்ப்புற விவகாரங்களுக்கான தேசிய நிறுவனத்துடன் இணைந்து 13 நகரங்களுக்கான நகர்ப்புற நதி மேலாண்மைத் திட்டங்களை நிறைவு செய்துள்ளது. தூய்மை கங்கை திட்டத்தின் கீழ், முதற்கட்டத்தில் 27 நகரங்களுக்கும், இரண்டாம் கட்டத்தில் கூடுதலாக 33 நகரங்களுக்கும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதால், கங்கை நதிப் படுகை முழுவதும் மொத்தம் 60 நகரங்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. 2019 டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் அடிப்படையில், நகரத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சி என்பதற்குப் பதிலாக, நதியை மையமாகக் கொண்ட திட்டமிடல் அணுகுமுறையாக மாற்ற இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்த உத்தி சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, மாசுக் கட்டுப்பாடு, வெள்ளப் பாதிப்புத் தடுப்பு, கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்பு மற்றும் மக்கள் பங்களிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.
உலக வங்கியின் ஆதரவுடன் உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இத்திட்டம் பல கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதில் கங்கோத்ரி முதல் ஹவுரா வரையிலான பல்வேறு புவியியல் பகுதிகள் அடங்கும். ஹல்த்வானி, ராம்நகர், ரிஷிகேஷ், கோரக்பூர், ஷாஜகான்பூர், பிரயாக்ராஜ், பக்ஸர், சப்ரா, கயா உள்ளிட்ட பல நகரங்களுக்கான திட்டங்கள் தற்போது நிறைவடைந்துள்ளன. கான்பூரில் கழிவுநீர் கால்வாயை நல்வழிப்படுத்துதல் மற்றும் ஏரிகளைப் புதுப்பிக்கும் நவீன தொழில்நுட்பங்கள் போன்ற முன்னோடித் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. செயல் திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை மானியம் உள்ளூர் நகர்ப்புற அமைப்புகளுக்கு முக்கிய ஊக்கமாக அமைந்துள்ளது. கங்கை நதியின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து 97 நகரங்களையும் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வருவதுடன், எதிர்காலத்தில் கங்கை படுகைக்கு வெளியேயும் உள்ள பிற இந்திய நதி அமைப்புகளுக்கும் இதனை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
****
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2277558)
आगंतुक पटल : 7