புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் நிலக்கரி தொடர்பான சொத்துக் கணக்குகளை தொகுப்பதற்கான அணுகுமுறைகள் குறித்த விவாதக் கட்டுரை வெளியீடு

प्रविष्टि तिथि: 24 JUN 2026 1:11PM by PIB Chennai

மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம், "இந்தியாவில் நிலக்கரி தொடர்பான சொத்துக் கணக்குகள் தொகுத்தல் வழிமுறைக்கான அணுகுமுறைகள்" என்ற தலைப்பிலான விவாதக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. சர்வதேச புள்ளி விவரத் தரநிலையான ஐக்கிய நாடுகள் புள்ளியியல் ஆணையத்தின் சுற்றுச்சூழல்-பொருளாதாரக் கணக்கியல் கட்டமைப்பிற்கு இணங்க இது தயாரிக்கப்பட்டுள்ளது.

இயற்கை வளங்களின் பொருளாதார மதிப்பை அளவிடவும், எதிர்காலத்தில் அரசின் வருவாயைக் கணக்கிடவும் இந்த மதிப்பீடு பெரிதும் உதவுகிறது. நாட்டின் பொருளாதார உத்தி ரீதியாக மின் உற்பத்தி, எஃகு, சிமெண்ட், ரசாயனம் போன்ற பல்வேறு முக்கியத் தொழில்களுக்குத் தேவையான முக்கிய ஆற்றல் மூலமாக நிலக்கரி விளங்குகிறது. நாட்டின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு நிலக்கரியின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.

ஆய்வு செய்யப்பட்ட மூன்று சர்வதேச வழிமுறைகளில், ஓஇசிடி 2025 வழிமுறையே மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் தற்போதைய தரவு உள்கட்டமைப்பிற்கு மிகவும் பொருத்தமானதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தரவு சார்ந்த கொள்கை உருவாக்கத்தை வலுப்படுத்த இந்த விவாதக் கட்டுரை குறித்து வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசு நிறுவனங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தக் கட்டுரையை www.mospi.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277379&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2277521) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी