இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

நெஸ்ட்ரா டேட்டா நிறுவனத்தின் (இலக்கு நிறுவனம்) குறிப்பிட்ட பங்குகளை ஆல்பா வேவ் வெஞ்சர்ஸ் II, எல்பி (கையகப்படுத்தும் நிறுவனம்) கையகப்படுத்துவதற்கு இந்திய வணிக போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது

प्रविष्टि तिथि: 23 JUN 2026 6:05PM by PIB Chennai

நெஸ்ட்ரா டேட்டா நிறுவனத்தின் (இலக்கு நிறுவனம்) குறிப்பிட்ட பங்குகளை ஆல்பா வேவ் வெஞ்சர்ஸ் II, எல்பி  (கையகப்படுத்தும் நிறுவனம்) கையகப்படுத்துவதற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த முன்மொழியப்பட்ட வணிக ஒருங்கிணைப்பு நடவடிக்கை, இலக்கு நிறுவனத்தின் மூலதனப் பங்குகளை முதன்மைச் சந்தா முறையில் பெறுவதன் மூலம், அதில் குறிப்பிட்ட பங்குத்தொகுப்பைக் கையகப்படுத்துவது தொடர்பான நடவடிக்கையாகும்.

பங்குகளைக் கையகப்படுத்தும் நிறுவனம், ஒரு தனியார் பங்கு முதலீட்டு நிதியமாகும். இது ஆல்பா வேவ்  குளோபல், லுனாடே ஹோல்டிங்  நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான ஆல்பா வேவ் வெஞ்சர்ஸ்  ஜிபி நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

இலக்கு நிறுவனம், இந்தியாவில் தரவு மையக் கூட்டு அமைவிடச் சேவைகளை  வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக, இந்திய வணிகப் போட்டி ஆணையத்தின் விரிவான உத்தரவு பின்னர் வெளியிடப்படும்.

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277129&reg=3&lang=1

(Release ID: 2277129)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2277303) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी