சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தில்லி-என்சிஆர் பகுதியில் பழைய லாரிகள், பேருந்துகளை மாற்றுவதற்கான மத்திய அரசின் திட்டத்தில் 'டைம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ்' நிறுவனம் இணைந்துள்ளது
प्रविष्टि तिथि:
23 JUN 2026 6:10PM by PIB Chennai
தில்லி-தேசியத் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதியில் பழைய லாரிகள், பேருந்துகளை மாற்றுவதற்கான மத்திய அரசின் திட்டத்தின் கீழ், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திற்கும், 'பாரத் பென்ஸ்' வர்த்தகத்தை நிர்வகிக்கும் டிஐசிவி நிறுவனத்திற்கும் இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் தகுதியான லாரிகள், பேருந்துகளின் விற்பனையக விலையில் 8 சதவீத தள்ளுபடியை அந்தந்த வாகன உற்பத்தியாளர் வழங்குவார். மின்சார வாகனங்களைப் பொறுத்தவரை, அதே மொத்த வாகன எடை வகையைச் சேர்ந்த 'உள் எரிப்பு இயந்திரம்' (ஐசிஇ) கொண்ட வாகனத்திற்கு வழங்கப்படும் தள்ளுபடி அளவே இதற்கும் அதிகபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்படும்.
இத்திட்டத்தில் பங்கேற்கும் வாகன உற்பத்தியாளர்கள் வழங்கும் 8 சதவீத தள்ளுபடியுடன் கூடுதலாக, மத்திய அரசு 5 சதவீத வட்டி மானியம், ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான மாதாந்திர எரிபொருள் கூப்பன்களை வழங்கும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் தகுதியானவர்களுக்கு, பங்கேற்கும் மாநில அரசுகள் பத்து ஆண்டுகளுக்கு மோட்டார் வாகன வரியில் 100 சதவீதம் வரை சலுகை அளிப்பதுடன், பதிவு கட்டணத்திலிருந்தும் விலக்கு அளிக்கும்.
முன்னதாக, அசோக் லேலண்ட், ஸ்விட்ச் மொபிலிட்டி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் எஸ்எம்எல் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களும் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய அரசுடன் கையெழுத்திட்டுள்ளன. லாரிகள், பேருந்து சந்தையில், இந்த நிறுவனங்கள் இணைந்து 85 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளன. இது இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவிலான விரிவான சேவை வழங்குவதை உறுதி செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277136®=3&lang=1
(Release ID: 2277136)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2277278)
आगंतुक पटल : 5