இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

அஸ்டெமோ நிறுவனத்தின் 21% பங்குகளை ஹோண்டா மோட்டார் நிறுவனம் கையகப்படுத்துவதற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது

प्रविष्टि तिथि: 23 JUN 2026 6:04PM by PIB Chennai

அஸ்டெமோ நிறுவனத்தின் 21% பங்குகளை ஹோண்டா மோட்டார் நிறுவனம் கையகப்படுத்துவதற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த வணிக ஒருங்கிணைப்பு நடவடிக்கை, ஹிட்டாச்சி நிறுவனத்திடமிருந்து (விற்பனையாளர்) அஸ்டெமோ நிறுவனம் (கையகப்படுத்தப்படவுள்ள நிறுவனம்) 21% பங்குகளை ஹோண்டா மோட்டார் நிறுவனம் (கையகப்படுத்தும் நிறுவனம்) வாங்குவது தொடர்பானதாகும்.

பங்குகளைக் கையகப்படுத்தும் நிறுவனம், ஜப்பானின் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 'ஹோண்டா கிக்கேன் கோகியோ கபுஷிகி கிஷா' என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட பொறுப்புடைய கூட்டுப் பங்கு நிறுவனமாகும். இது "ஹோண்டா குழும நிறுவனங்களின் முதன்மை நிறுவனமாகும். இந்தியாவில், இந்நிறுவனம் முக்கியமாக, இருசக்கர வாகனங்கள், மின்சக்தி சார்ந்த தயாரிப்புகளின் உற்பத்தி,  விற்பனை, (ii) தானியங்கி வாகனங்கள், இருசக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்களின் உற்பத்தி, விற்பனை, (iii) ஆராய்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277126&reg=3&lang=1

(Release ID: 2277126)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2277240) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी