தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தில்லியில் உள்ள தகவல் தொடர்பு கணக்கு முதன்மை கட்டுப்பாட்டாளர் அலுவலகம், ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாமை வெற்றிகரமாக நடத்தியது
प्रविष्टि तिथि:
23 JUN 2026 5:12PM by PIB Chennai
தில்லியில் உள்ள தகவல் தொடர்பு கணக்குகள் முதன்மை கட்டுப்பாட்டாளர் அலுவலகம், இன்று, இணை தகவல்தொடர்பு கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரி (ஓய்வூதியம்) திரு. ரஜத் திரிபாதி, உதவி தகவல்தொடர்பு கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரி (ஓய்வூதியம்) திரு. ஷ்யாம் லால் தாஸ் ஆகியோரின் தலைமையில், 2026-27-ம் நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாமை வெற்றிகரமாக நடத்தியது. பிஎஸ்என்எல், எம்சிஎன்ல், தொலைத்தொடர்புத் துறை ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் வழங்குதல், மாற்றுத்தொகை, பிற பலன்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டன.
ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளைக் கையாள்வதற்கு, இந்த ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம், ஒரு சிறந்த தளத்தை வழங்கியது. ஓய்வூதிய அங்கீகாரம், திருத்தம், குடும்ப ஓய்வூதியம், பிற ஓய்வூதிய விஷயங்கள் தொடர்பான பிரச்சினைகள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இது தொடர்பான விசாரணையின் போது, பல்வேறு வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன. எஞ்சியுள்ள வழக்குகளுக்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளன.
தில்லியில் உள்ள தகவல்தொடர்பு கணக்குகள் கட்டுப்பாட்டு முதல்வர் அலுவலகம், ஓய்வூதியதாரர்களுக்கு உரிய நேரத்தில், செயல்திறன் மிக்க சேவையை வழங்க உறுதிபூண்டுள்ளதுடன், ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக இதுபோன்ற முகாம்களை எதிர்காலத்திலும் தொடர்ந்து நடத்த உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277072®=3&lang=1
(Release ID: 2277072)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2277195)
आगंतुक पटल : 4