சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
அஞ்சல் துறை ஓய்வூதியர்களுக்கான வட்ட அளவிலான ஓய்வூதிய குறை தீர்க்கும் முகாம்
प्रविष्टि तिथि:
23 JUN 2026 6:31PM by PIB Chennai
அஞ்சல் துறை ஓய்வூதியர்களுக்கான சென்னை நகர தென்மண்டல வட்ட அளவிலான குறை தீர்ப்பு முகாம் 2026 ஜூலை 07 அன்று காலை 11 மணி அளவில் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள சென்னை நகர தென்மண்டல அஞ்சல் அலுவலக முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து பரங்கிமலை தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் அதன் துணை அலுவலகங்களைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளையும், கருத்துக்களையும் அஞ்சல் அலுவலக முதுநிலை கண்காணிப்பாளர், 107 வடக்கு உஸ்மான் சாலை தி.நகர் சென்னை 17 என்ற முகவரிக்கோ அல்லது (dochennaicitysouth.tn@indiapost.gov.in) என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ 30.06.2026-க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
****
TV/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2277150)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English