பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மார்ஷல் ஆஃப் தி ஏர் ஃபோர்ஸ் அர்ஜன் சிங் நினைவு ஹாக்கிப் போட்டியின் 7-வது பதிப்பு ஜூன் 23 அன்று துவங்குகிறது

प्रविष्टि तिथि: 22 JUN 2026 7:55PM by PIB Chennai

'2026 மார்ஷல் ஆஃப் தி ஏர் ஃபோர்ஸ் அர்ஜன் சிங் நினைவு ஹாக்கிப் போட்டியின்’ 7-வது பதிப்பு, நாளை (ஜூன் 23, 2026) முதல் ஜூலை 3 வரை பெங்களூருவில் உள்ள ஜலஹள்ளி விமானப்படை நிலையத்தில் நடைபெறவுள்ளது. விமானப்படை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம் (AFSCB) 2018-ம் ஆண்டு முதல் இந்தப் போட்டியை நடத்தி வருகிறது.

இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த போட்டிகள் ஜலஹள்ளி விமானப்படைத் தளத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் நடைபெறும். போட்டிகள்,  லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படும். தொடரில் வெற்றி பெறும் அணிக்கு ₹10 லட்சமும், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு ₹8 லட்சமும், ஆட்ட நாயகனுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் ₹25,000மும்,        தொடர் நாயகனுக்கு  ₹50,000மும் பரிசுத் தொகை வழங்கப்படும்.

ஜூன் 23, 2026 அன்று நடைபெறும் தொடக்க விழாவில் நிர்வாகப் பிரிவுக்கான விமானப்படை அதிகாரி ஏர் மார்ஷல் எஸ். சிவகுமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பார். ஜூலை 3, 2026 அன்று நடைபெறும் நிறைவு விழாவிற்குப் பயிற்சிப் பிரிவின் தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் சீதேபள்ளி ஸ்ரீனிவாஸ் தலைமைத் தாங்குவார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276830&reg=3&lang=1

(Release ID: 2276830)

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2276849) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी