ஆயுஷ்
azadi ka amrit mahotsav

தில்லியில் 40 இடங்களில் பொதுமக்களின் பங்கேற்புடன், சர்வதேச யோகா தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது

प्रविष्टि तिथि: 21 JUN 2026 2:12PM by PIB Chennai

மத்திய ஆயுஷ் அமைச்சகம், இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை, மத்திய கலாச்சார அமைச்சகம் ஆகியவை இணைந்து, தில்லி முழுவதும் உள்ள 40 முக்கிய இடங்களில், இன்று 12-வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடியது. பொதுமக்களின் உற்சாகமான பங்கேற்பு, மக்கள் பங்கேற்பு என்ற உணர்வையும், யோகாவை ஒரு வாழ்க்கை முறையாக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

"ஆரோக்கியமான முதுமைக்கான யோகா" என்ற இந்த ஆண்டிற்கான  கருப்பொருளின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், பல்வேறு தரப்பட்ட மக்களும் ஒன்றிணைந்து 'பொது யோகா நெறிமுறையை' பின்பற்றினர். உடல் நலம், மன சமநிலை, ஆரோக்கியமான முதுமை ஆகியவற்றை மேம்படுத்துவதில் யோகாவின் பங்களிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

மத்திய ஆயுஷ் அமைச்சகம், இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை ஆகியவற்றுடன் இணைந்து, மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், புதுதில்லி மாநகராட்சி, தில்லி மேம்பாட்டு ஆணையம், பல்வேறு யோகா நிறுவனங்கள் ஆகியவை தில்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தன.

தேசியத் தலைநகரில் நடைபெற்ற யோகா தினக் கொண்டாட்டங்களின் முக்கிய நிகழ்வாக, பிரம்ம குமாரிகள் (தில்லி மண்டலம்) அமைப்பின் ஒத்துழைப்புடன் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276080&reg=3&lang=1

****

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2276363) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी