எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் எரிசக்தித் துறை அமைச்சர்கள் கூட்டம் குருகிராமில் ஜூன் 25-26 தேதிகளில் நடைபெறவுள்ளது

प्रविष्टि तिथि: 21 JUN 2026 3:48PM by PIB Chennai

இந்தியா தலைமையில் 2026-ம் ஆண்டிற்கான பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் எரிசக்தித் துறை  அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம், ஹரியானா மாநிலம் குருகிராமில் நடைபெறவுள்ளது.

இம்மாதம் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்த இரண்டு நாள் ஆலோசனைக்கு கூட்டத்தில், எரிசக்தி பாதுகாப்பு, நிலைத்தன்மை,  புத்தாக்கம் ஆகியவற்றில் உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

கடந்த 2012, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் இந்தியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தை தொடர்ந்து, 2026-ம் ஆண்டில் தற்போது  இந்தியா நான்காவது முறையாக பிரிக்ஸ் அமைப்பின் கூட்டத்திற்கு தலைமைப் பொறுப்பேற்று நடத்தவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், "மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு" என்ற முக்கிய கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, அனைவருக்கும் எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்வதில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் கூட்டு அர்ப்பணிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், நடைபெறவுள்ளது.

பிரிக்ஸ் அமைப்பில் தற்போது பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 11 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276137&reg=3&lang=1

****

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2276337) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी