குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் உள்ள காந்தி தர்ஷனில் அமைந்துள்ள பல்நோக்கு பயிற்சி மைய வளாகத்தில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் 12-வது சர்வதேச யோகா தினத்தை உற்சாகமாகக் கொண்டாடியது

प्रविष्टि तिथि: 21 JUN 2026 3:58PM by PIB Chennai

12-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் சார்பில், புது தில்லியின் காந்தி தர்ஷன் வளாகத்தில் உள்ள பல்நோக்கு பயிற்சி மைய வளாகத்தில் யோகா நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை, வழக்கமான யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவரும், இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினருமான திரு. மனோஜ் கோயல், காதித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுடன் இணைந்து இந்த யோகா அமர்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் 'ஆரோக்கியமான முதுமைக்கான யோகா' என்பதாகும். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உடல், மனம், உணர்வு சார்ந்த நல்வாழ்வைப் பேணுவதில், யோகா வகிக்கும் முக்கிய பங்களிப்பு குறித்து இந்தக் கருப்பொருள் முன்னிலைப்படுத்துகிறது.

யோகா அமர்வைத் தொடர்ந்து, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் உத்வேகத்தால் தொடங்கப்பட்ட தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும்  இயக்கத்தின் கீழ், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு. மனோஜ் கோயல் அலுவலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமையான இந்தியாவை உருவாக்குவதில் அனைவரும் தீவிரமாகப் பங்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. மனோஜ் கோயல், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமைதத்துவம், முன் முயற்சிகளின் கீழ், யோகா, காதி ஆகிய இரண்டும், உலகளவில் மக்கள் இயக்கங்களாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமின்றி, அது சமநிலையையும் நேர்மறை எண்ணங்களையும் வளர்க்கும் ஒரு இந்திய வாழ்க்கை முறை என்றும், அதே வேளையில் காதி என்பது தன்னிறைவு, சுதேசி உணர்வு,  நிலையான வளர்ச்சியின் அடையாளமாகத் திகழ்கிறது என்றும் அவர் கூறினார். யோகா மற்றும் காதி ஆகிய இரண்டையும் மக்களிடம் நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பதற்கான பிரதமரின் முயற்சிகள், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் மறுமலர்ச்சிக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றன என்று திரு. மனோஜ் கோயல் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276150&reg=3&lang=1

****

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2276324) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati