குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆக்ராவில் முதலாவது பிரிக்ஸ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கருத்தரங்கையும், மூன்றாவது பணிக்குழு கூட்டத்தையும் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் வெற்றிகரமாக நடத்தியது

प्रविष्टि तिथि: 21 JUN 2026 6:30PM by PIB Chennai

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், ‘மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மைக்காகக் கட்டமைத்தல்’ என்ற  கருப்பொருளின் கீழ், முதலாவது பிரிக்ஸ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கருத்தரங்கையும், பணிக்குழு கூட்டத்தையும் 2026 ஜூன் 19 அன்று உத்தரப் பிரதேச மாநிலம்  ஆக்ராவில் வெற்றிகரமாக நடத்தியது.

பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், பெலாரஸ், கியூபா, மலேசியா, உகாண்டா மற்றும் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், மூத்த அரசு அதிகாரிகள், தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பல்வேறு துறைகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பன்முகத்தன்மை, சிறப்பை வெளிப்படுத்தும் கண்காட்சியுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. மூன்றாவது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பணிக்குழுக் கூட்டம், ‘குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சூழலமைப்பை உருவாக்குதல் – நிலையான வேர்களிலிருந்து உலகளாவிய பாதைகள் வரை’ என்ற கருப்பொருளில் விரிவான விவாதம் நடைபெற்றது. இதில், உறுப்பு நாடுகள் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சூழலமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தங்களது அனுபவங்களையும் கொள்கைத் தலையீடுகளையும் பகிர்ந்துகொண்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2276258&reg=3&lang=1

****

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2276318) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी