சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மத, சாதி, இன பேதமின்றி உலக மக்கள் அனைவரையும் யோகா ஒன்றிணைக்கிறது - மத்திய அமைச்சர் திரு வீரேந்திர குமார்
प्रविष्टि तिथि:
21 JUN 2026 11:04AM by PIB Chennai
மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார் தலைமையில், சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம், புதுதில்லி, ஜன்பத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் சர்வதேச யோகா தின நிகழ்வை கொண்டாடியது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு வீரேந்திர குமார் மத, சாதி, இன பேதமின்றி உலக மக்கள் அனைவரையும் யோகா ஒன்றிணைக்கிறது என்றார். இது, நமது கலாச்சார நெறிக்கும் நல்வாழ்விற்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியின்போது மத்திய அமைச்சர் திரு வீரேந்திர குமார் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு, மூத்த குடிமக்களின் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான உறுதிமொழிகள் ஏற்பும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர், வி. வித்யாவதி, கூடுதல் செயலாளர் மன்மீத் கவுர் நந்தா, இணைச் செயலாளர் திரு ஷைலேந்திர குமார், இணைச் செயலாளர் திரு பிரவீன் குமார் திந்த், சமூக நீதி - அதிகாரமளித்தல் துறையின் கூடுதல் செயலாளர் திருமதி மோனா கந்தஹார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275959®=48&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2276294)
आगंतुक पटल : 6