பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படைகள் சார்பில் மாபெரும் கண் அறுவை சிகிச்சை முகாம்

प्रविष्टि तिथि: 19 JUN 2026 5:52PM by PIB Chennai

ராணுவம், விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த ஒரு சிறப்பு கண் மருத்துவக் குழு, 'ஆபரேஷன் திருஷ்டி' என்ற சிறப்பு மருத்துவ நடவடிக்கையின் கீழ், ராஞ்சியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் 2026 ஜூன் 15 முதல் 19 வரை 9-வது மெகா கண் அறுவை சிகிச்சை முகாமை வெற்றிகரமாக நடத்தின.

 

இதில் 2,500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 260-க்கும் மேற்பட்ட கண்புரை அறுவை சிகிச்சைகளும் அடங்கும். அதில் 100-க்கும் மேற்பட்டவை பின்தங்கிய பழங்குடியின நோயாளிகளுக்குப் பயனளித்தன. இந்த முகாமில், மேம்பட்ட குறைந்தபட்ச ஊடுருவல் கண் அழுத்த அறுவை சிகிச்சைகள், நீரிழிவு விழித்திரை நோய்க்கான அறுவை சிகிச்சை மேலாண்மை மற்றும் பார்வையைக் காக்கும் ஆன்டி-விஇஜிஎஃப் ஊசிகள் ஆகிய சேவைகளும் வழங்கப்பட்டன.

 

நிறைவு விழாவில் பேசிய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், 'ஆபரேஷன் திருஷ்டி' என்ற இந்த சிகிச்சை நடவடிக்கையை மேற்கொண்ட குழுவினரின் அர்ப்பணிப்பையும் திறனையும் பாராட்டினார்.

 

டிசம்பர் 2024-ல் டேராடூனில் தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் திருஷ்டி', ஜெய்ப்பூர், பாக்டோக்ரா, உதம்பூர், லட்சத்தீவுகள், புஜ், கோரக்பூர், லே-லடாக் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது. ராஞ்சியில் ஒன்பதாவதாக இந்த முகாம் நடத்தப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275310&reg=3&lang=1

 

(Release ID : 2275310)

***

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2275735) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी