சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய ஆணையம், குடிமைப் பணித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

प्रविष्टि तिथि: 19 JUN 2026 5:11PM by PIB Chennai

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய ஆணையம், புதுதில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் குடிமைப் பணித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை கடந்த ஜூன் 19 அன்று வெற்றிகரமாக நடத்தியது. இந்நிகழ்ச்சியின் கருப்பொருள் “வழிகாட்டுதல் • வழிகாட்டியாகத் திகழ்தல் • அதிகாரமளித்தல்” என்பதாகும்.

திரிபுரா மாநில ஆளுநர் திரு. இந்திரசேனா ரெட்டி நல்லு  இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடையே உரையாற்றிய அவர், தேர்வுக்கு தயார் செய்வது குறித்த வழிகாட்டுதல், இந்தியாவில் குடிமைப் பணிகளின் வரலாறு, வெற்றிக்குத் தேவையான உத்திகள் போன்ற முக்கிய தலைப்புகளில் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

இந்த ஆணையத்தின் தலைவர் திரு. கிஷோர் மக்வானா, ஆணையத்தின் உருவாக்கம், அதன் பணிகள், அதிகாரங்கள், ஷெட்யூல்டு வகுப்பினருக்கு அதிகாரமளிப்பதில் ஆணையத்தின் பங்களிப்பு குறித்தும் விரிவாகப் எடுத்துரைத்தார். இந்த ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் பார்த்த பிஸ்வாஸ், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் “கல்வி பெறுங்கள், ஒன்று சேருங்கள், போராடுங்கள்” என்ற உத்வேகம் அளிக்கும் முழக்கத்தைக் கடைப்பிடிக்குமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2275251&reg=3&lang=1

(Release ID: 2275251)

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2275711) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी