சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆரோக்கியமான முதுமைக்கான யோகா" என்ற கருப்பொருளில், புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில், 1,500 மூத்த குடிமக்கள் பங்கேற்கின்றனர்

प्रविष्टि तिथि: 20 JUN 2026 3:05PM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 2026 ஜூன் 21 அன்று காலை 11:00 மணி முதல் புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சிறப்பு யோகா தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. 12-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில், மூத்த குடிமக்கள் 1,500 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2026-ம் ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தையொட்டி,  "ஆரோக்கியமான முதுமைக்கான யோகா" என்ற தேசிய கருப்பொருளில்,  இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மூத்த குடிமக்களிடையே சுறுசுறுப்பான, ஆரோக்கியமான முதுமை, நல்வாழ்வு, சுதந்திரம், சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதில் அமைச்சகத்தின் தொடர் அர்ப்பணிப்பை இது பிரதிபலிப்பதாக உள்ளது.

இந்தத் தேசிய தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தும் வகையில், மூத்த குடிமக்களின் நீண்ட ஆயுள், உணர்வுப்பூர்வமான நல்வாழ்வு, கண்ணியமான முதுமை ஆகியவற்றை ஆதரிப்பதற்கான நடைமுறை, நிலையான அணுகுமுறையாக யோகாவை ஊக்குவிப்பதை மத்திய அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மூத்த குடிமக்கள் பங்கேற்கும் கூட்டு யோகா பயிற்சி,  விழிப்புணர்வுடன் கூடிய வாழ்க்கை, மன அமைதி, உணர்வுப்பூர்வமான நல்வாழ்வு, ஆரோக்கியமான முதுமை ஆகியவற்றின் மீதான ஆன்மீக உரை ஆகியவை இடம்பெறும். நாடு 2026-ம் ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், ஆரோக்கியமான, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உள்ளடக்கிய இந்த கூட்டு முயற்சியில் பங்கேற்குமாறு, நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களுக்கு மத்திய அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275626&reg=3&lang=1

(Release ID: 2275626)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2275706) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Urdu , हिन्दी